20-4-22/13.11PM
புதுதில்லி : பிரபல தெலுங்கு நடிகரான மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் தனது அடுத்த படைப்பிற்காக அமிர்தசரஸில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். அங்கு எல்லைப்பாதுகாப்பு படைவீரர்களை சந்தித்து அவர்களின் வரலாற்றை கேட்டறிந்தார்.

ஆர்.ஆர்.ஆர். உலகமகா ஹிட் கொடுத்த ராம்சரண் BSF வீரர்களை சந்தித்தார். அப்போது வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு “காசா அமிரதசரஸில் உள்ள பி.எஸ்.எப் வளாகத்தில் உள்ள எல்லைப்பாதுகாப்பு படையின் வரலாறு தியாகங்கள் அவர்களின் அர்ப்பணிப்புகள் ஆகியவற்றை கேத்தரீன்ட் அதில் எனது மதியநேரம் ஊக்கமளிக்கும் விதமாக செலவழிந்தது” என தெரிவித்துள்ளார்.
ராம்சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அமிர்தசரஸ் பொற்கோவிலில் லங்கார் சேவையையேற்பாடு செய்தார்.ராம்சரண் அவர்களின் மனைவி உபாசனா காமினேனி கோனிடேலா இதுகுறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். “அவர் RC 15 படப்பிடிப்பில் இருந்ததால் சேவாவில் கலந்துகொண்டு அவருடன் தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த நிகழ்வு எனது ஆன்மாவுக்கு உணவளித்துள்ளது” என கூறியுள்ளார்.
https://www.instagram.com/tv/CchUHNyhfKV/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/Cch7DVwBVYV/?utm_source=ig_embed&utm_campaign=loading
பொற்கோவில் குருத்வாரா கமிட்டி உபசனாவுக்கு பொற்கோவிலின் உருவப்படத்தை பரிசாக அளித்துள்ளது. ராம்சரண் தற்போது நடித்துவரும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துவருகிறார்.எஸ்.ஷங்கர் இந்த படத்தை இயக்கிவருகிறார். தெலுங்கு படங்கள் தேசியம் பேசிக்கொண்டிருக்க தமிழ்ப்படங்கள் புரட்சி பேசுகிறோம் பேர்வழி என்கிற போர்வையில் பிரிவினையை விதைப்பதாக சினிமா ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
……உங்கள் பீமா
