ஆசிய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று கோலாகலமாக துவங்கியது. இன்று துவங்கும் 15 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்து முடிந்த 14 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ௭7முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது , 5 முறை இலங்கை அணியும் 2 முறை பாக்கிஸ்தான் அணியும் வென்றுள்ளனர் .

இதற்க்கு முன்னர் 1988 , 1990 , 1995 ஆகிய மூன்று ஆசிய கோப்பைகளை தொடர்ந்து வென்று ஹாட்ரிக் ஆசிய கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது இந்திய அணி . இம்முறை டபுள் ஹாட்ரிக் அடிக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது . இதற்க்கு முன்னர் நடந்த 2016 , 2018 ஆகிய ஆசிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ள நிலையில் . இம்முறை வெற்றிபெற்றால் மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனை படைக்கலாம்
கடந்த ஆண்டு நடைபெற்ற டீ௨௦ உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாக்கிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது . அதற்க்கு பதிலடி தரும் முனைப்பில் இந்திய அணி உள்ளது . இதற்காக கடந்த முறை பாக்கிஸ்தான் செய்தது போல ஆட்டத்திற்கு ஒரு நாள் முன்பாகவே ௧௧ பேர் கொண்ட அணியை சூசகமாக வெளியிட்டுள்ளது பிசிசிஐ .
பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் 10 புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர் . அதில் முதல் படத்தில் கேப்டன் ரோஹித் மற்றும் துணை கேப்டன் கே எல் ராகுல் உள்ளனர் . தொடர்ந்து வரிசையாக ஓப்பனிங், மிடில் ஆர்டர், ஆல்-ரவுண்டர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என 11 பேரையும் மாற்றம் கூட செய்யாமல் வரிசையாக பதிவிட்டுள்ளது. இதில் ஒரு தமிழக வீரரான அஸ்வின் இடம்பெறாவிட்டாலும் . மற்றோரு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றியிருப்பது தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது
மேலும் கடந்த முறை நாம் செய்த மிகப்பெரிய தவறு 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் இருந்தது . ஒருவர் காயம் அடைந்தாலோ அல்லது அதிக ரன்களை கொடுத்தாலோ மாற்று பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி திண்டாடியது . இந்த முறையும் அதே தவறை செய்துள்ளது . பிசிசிஐ வெளியிட்ட 11 வீரர்களின் புகைப்படத்தில் புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் , ஹர்திக் பாண்டியா என 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர் இதை தாண்டி வேறு பவுலர் இல்லை .
— BCCI (@BCCI) August 26, 2022
பிசிசிஐ வெளியிட்ட புகைப்படங்களின்படி அணியின் விவரம் ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங்
