உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ வாக பணியாற்றி வருகிறார் சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.இவர் சென்னை சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.பின்னர் இவர் வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை ஐ.ஐ.டி கரக்பூர் கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் படிக்கும் போது அஞ்சலியை சந்தித்தார். அஞ்சலி இவருடன் ஒரே வகுப்பில் படித்தவர்.இவர்கள் இருவரும் நீண்ட காலம் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.இவர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று விட்டார்.இவர் அமெரிக்காவில் இருக்கும் போது அஞ்சலியுடன் பேச முடியாமல் தவித்தார்.
இவர் 6 மாதங்கள் அஞ்சலியுடன் பேச முடியாமல் தவித்தார்.இந்த ஆறு மாதத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
அஞ்சலி இவரை பார்க்க அமெரிக்கா சென்று சுந்தர் பிச்சையின் மனதில் ஒட்டி கொண்டார்.இவர் அமெரிக்காவில் வேலை பெற்ற கையோடு அஞ்சலியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பின்னர் சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் கம்பெனியில் வேலை கிடைத்தது. இவர் தொடர்ந்து கூகிள் கம்பெனி வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய துறையில் பணியாற்றி வந்தார். இவர் கூகுள் ஐடி நிறுவனத்தில் பல துறைகளில் கடுமையான பணியாற்றி வளர்ச்சி பெற்றார்.இவர் கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.தற்போது இவரின் சொத்து மதிப்பு $600 மில்லியன் ஆகும்.
