ராஞ்சி : அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீம் (AIMIM) நிறுவனர் மற்றும் எம்பியான அசாதுதீன் ஒவைஸி ராஞ்சி விமான நிலையத்தில் நுழையும்போது அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பெங்களூர் பகுதியில் CAA க்கு எதிராக அசாதுதீன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஞ்சி விமான நிலையத்தில் அதே முழக்கம் எழுப்பப்பட்டதால் விமான நிலையமே பரபரப்புக்குள்ளானது. மேலும் இதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
இதுகுறித்து ராஞ்சி காவல்துறை SDO ஹெகல் டிஎஸ்பி ஹதியாவுக்கு அனுப்பியுள்ள நோட்டிஸில் “துணை ஆணையரின் உத்தரவுக்கிணங்க பாகிஸ்தான் ஜிந்தாபாத் என விமானநிலையத்தில் முழங்கப்பட்டதாக வெளிவந்துள்ள வீடியோக்கள் மற்றும் செய்திகளை ஆராய்ந்து அதுதொடர்பான அறிக்கையை 24 மணிநேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என அந்த நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@asadowaisi shame on ur worker who chant PAKISTAN 😡…. if I m in ARMY and stay this place sure arrest all goons who chant this @PMOIndia @HMOIndia … Take serious note … Must @rashtrapatibhvn should take note 🙏 https://t.co/hxMx02kt0U
— MRUGESH PARMAR 🇮🇳 (@IamMrugesh) June 20, 2022
மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் ஒவைசியிடம் கேள்வியெழுப்பினர். அதற்க்கு பதிலளித்த ஒவைசி ” நுபுர் சர்மாவை கைதுசெய்யவில்லை. ராஞ்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நீதிகிடைக்கவில்லை. பிஜேபி பிரச்சினையை திசைதிருப்ப பார்க்கிறது” என குறிப்பிட்டார்.
மேலும் அவரிடம் காங்கிரசின் நிலைப்பாடு பற்றிய கேள்வியெழுப்பப்பட்டது. அசாதுதீன் கூறுகையில் ” காங்கிரசை முதலில் முதலைக்கண்ணீர் விடவேண்டாம் என சொல்லுங்கள். இஸ்லாமை புகழ்ந்ததற்காக மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறக்கமுடியுமா” என தெரிவித்தார்.
