Thursday, May 14, 2026
Home > செய்திகள் > தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்..! சிக்கிய பாபா யூசுப்..!

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்..! சிக்கிய பாபா யூசுப்..!

30-3-22/10.52AM

சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை தர்ம தாழ்ந்து விமர்சிப்பதும் ஆபாசமாக அருவருப்பாக பேசுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. அவரின் ஆதாரபூர்வமான பேச்சுக்களை எதிர்கொள்ள வழியில்லாத பலர் கருத்துக்களை எதிர்கொள்ள வழியில்லாமல் ஒருமையில் பேசிவருகின்றனர்.
இதில் சிலர் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர்.

இதனிடையே திருநெல்வேலி மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்த பாபா யூசுப் (52)என்பவர் தனது முகநூலில் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு கொலைமிரட்டல் விடுத்திருந்தார். கொடூர ஆயுதங்களின் படத்தையும் அண்ணாமலையின் படத்தையும் பகிர்ந்து அண்ணாமலையின் தலையை துண்டிக்கவேண்டும் என பதிவிட்டிருந்தார்.இவர் ஒரு ஹோட்டலில் கூலியாளாக வேலைபார்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாபா யூசுப்பை கைது செய்த போலீசார் மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்தல், கொலைமிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். போலீசாரின் இந்த துரித செயல்பாடு அனைவர் மத்தியிலும் நற்பெயரை உண்டுபண்ணியுள்ளது.

அதேநேரத்தில் இது ஒரு கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடாமல் ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் பதிவை கண்காணித்து அவர்களையும் கைதுசெய்ய காவல்துறை முன்வரவேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா

#annamalai #bjp #lifethreaten #nellai #baba #yousuf