Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! சிக்கிய ஷபீர் அலி..!

17 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! சிக்கிய ஷபீர் அலி..!

29-3-22/12.00PM

சட்டீஸ்கர் : சுராஜ்புர் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்ததோடு தற்கொலையாக மாற்ற முயன்ற சபீர் அலியை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய சுராஜ்பூர் அடிஷனல் சூப்பரின்டென்ட் ஹரிஷ் ரத்தோர் “கடந்த வியாழனன்று பிராக்டிகல் எக்ஸாம் முடித்துவிட்டு தனது சொந்த ஊரான சுராஜ்பூர் திரும்பியுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட ஷபீர் அலி வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு உள்ளே நுழைந்துள்ளான். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறான். மேலும் தற்கொலை போல இருக்கவேண்டும் என்பதற்காக இறந்த மாணவியின் துப்பட்டாவை படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டது போல செய்திருக்கிறான்.

மேலும் அந்த பெண்ணின் பேனாவை எடுத்து தற்கொலை கடிதமும் எழுதியிருக்கிறான். பின்னர் அங்கிருந்து தப்பியிருக்கிறான். வீடு திரும்பிய பெற்றோருக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர்” என கூறினார். மேலும் ஊர்மக்கள் போராட்டத்தில் இறங்கவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதையடுத்து போலீசார் ஷபீர் அலியை கைது செய்து 302,376 சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து கைதுசெய்துள்ளனர்.மேலும் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

…..உங்கள் பீமா