Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > கொடூர விபத்து..! ஏழு பேர் பலி..! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்..! நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்

கொடூர விபத்து..! ஏழு பேர் பலி..! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்..! நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்

27-3-22/11.32AM

ஆந்திரா : ஆனந்தபுரமு பகுதியை சேர்ந்த சிலர் திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் தர்மாவரம் ராஜேந்திர நகரை சேர்ந்த பெண்வீட்டார் திருச்சானூரில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த விழாவிற்கு தனியார் பேருந்தில் சென்றனர். மணப்பெண்ணையும் சேர்த்து 63 பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர்.

பேருந்து திருப்பதியிலிருந்து 25 கிலோமீட்டர் பகரப்பட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அடுபுட்டபி பள்ளத்தாக்கு பகுதியில் ஓரு பெரிய வளைவில் திரும்புகையில் பேருந்து தடுப்புசுவரை உடைத்துக்கொண்டு அங்கிருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இந்த கொடூர விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட எட்டு பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் மணப்பெண் படுகாயத்திற்குள்ளாகியுள்ளார். இந்த கோர விபத்தில் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த நேரம் நள்ளிரவு என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.

தற்போதுவரை மீட்புப்பணி நடைபெற்றுவருகிறது. படுகாயமடைந்தவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முதல்வர் ஜெகன் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு 50000மும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா