18-2-22/10.30am
கோயம்புத்தூர் : தமிழக நகர்ப்புற தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் ஓய்வுபெற்ற நிலையில் பிஜேபி தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மக்களிடையே பேசிய வீடியோ தற்போது திமுகவின் இமேஜை உடைத்தெறிவதாக அமைந்துள்ளதாக பிஜேபியினர் கூறிவருகின்றனர்.
மக்களிடம் ஆற்றிய உரையில் ” ரொம்ப சீரியஸா போய்ட்ருக்கு. அத குறைக்கணும். எல்லாரும் ரொம்ப கடுமையா வேலைசெய்யறீங்க.ஒரு அஞ்சுநிமிஷம் ரிலாக்ஸ் பண்ணலாம். இதுதான உங்களுக்கு கொடுக்கப்பட்ட கொலுசு. இந்த கொலுசு மூலமாக ஒரு தேர்தலை வென்று விடலாம் என்பது நப்பாசை. எனக்கு தெரியும் நான் ஒரு கரூர்க்காரன்.
கரூர்க்காரங்க எல்லாரும் நல்லவங்க தான். எல்லா ஊர்லயும் திமுககாரங்க இருக்கற மாதிரி கரூர்லயும் இருக்கறாங்க. கரூர் திமுககாரங்க வித்தியாசமானவங்க. நான் நேத்து கோயம்புத்தூர்ல என்க ஊரு திமுககாரரை பார்த்தேன். என்னன்ணே இங்க சுத்திட்ருக்க கோயம்புத்தூர் நல்லாதானே இருக்கு நீங்க கரூர்ல பண்ற அட்டகாசமே தாங்க முடியல. இங்க எதுக்கு வந்த என கேட்டேன். போன எலெக்சன்ல கொலுசு வாங்கினோம்ணே. அத குடுக்க வந்தேன்.
நான் கேட்டேன் 2021ல கரூர் ல கொடுத்தியே அதே கொலுசாய்யா. அடப்பாவி ஹைதராபாத்தில் வாங்கின கொலுசை கொலுசு தயாரிக்கற கோயம்புத்தூர்ல ஏன்யா கொடுக்கறன்னு கேட்டேன். பொதுவா கொலுசுல 100 சதவிகிதம் வெள்ளி இருக்கும். ஆனா இவங்க கொடுத்த கொலுசுல 16% மட்டுமே வெள்ளி இருக்கு. இவங்க கொடுத்த கொலுசை கோயம்புத்தூர்ல குடுத்து ரிப்போர்ட் வாங்கிருக்கேன்.
கவுண்டமணி சொன்னது போல ஈயம் பூசுனாமாதிரியும் இருக்கணும்.பூசாத மாதிரியும் இருக்கணும். வெறும் கம்பில வெள்ளி முலாம் பூசி குடுத்துருக்காங்க. எத்தனை நாட்களுக்கு மக்களை முட்டாளாக்க முடியும் என இங்கிருக்கும் அரசியல்வாதிகள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு இந்த ஒரு கொலுசே உதாரணம். ஆகவே கரூர் திமுககாரங்கள பார்த்தா ஒதுங்கி இருங்க” என மக்களிடையே பேசினார். அவரது பேச்சுக்கு மக்களிடையே பலத்த கரகோஷம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
……உங்கள் பீமா
