Saturday, October 5, 2024
Home > பொழுதுபோக்கு > 2022 எனக்கு மிக சிறப்பாக இருக்கும் பிரபல நடிகர் ட்வீட்….!

2022 எனக்கு மிக சிறப்பாக இருக்கும் பிரபல நடிகர் ட்வீட்….!

21-12-21/10.07am

கோலிவுட் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது முந்தைய சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து தற்போது தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படமும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ஹிந்தி தெரியாது போடா புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் F.I.R.

`

இந்த F.I.R திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், அடுத்த வருடம் பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாகிறது.விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த F.I.R படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

```
```

இதனிடையே நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா 2022-ல் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டரில், “2022 மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது… எனது திரைப்படங்கள் வெளிவருவதால் மட்டுமல்ல. எனது அன்புத்தம்பி ருத்ரா திரையுலகில் அறிமுகம் ஆவதால். அவரது முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களில் யாரிடமாவது நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் எங்களை அணுகலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா