Friday, April 17, 2026
Home > Cinema > அப்பா வயது நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்… எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருகேன் என ஓக்கே சொன்ன இளம் நடிகை!

அப்பா வயது நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்… எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருகேன் என ஓக்கே சொன்ன இளம் நடிகை!

சினிமா உலகம் எவ்வளவு பணத்தைத் தருமோ அதேயளவுக்கு புகழையும் தரும். அந்த இரண்டுக்கும் ஆசைப்பட்டு சினிமாவை நோக்கி ஈர்க்கப்படுபவர்கள் அதிகம். ஆனால் அதில் பெரும்பாலானவர்கள் விளக்கில் போய் விழுந்த விட்டில் பூச்சி போலதான். பல மோசடி பேர்வழிகளிடம் சிக்கி பாலியல் சுரண்டலுக்கு ஆளாவார்கள்.

ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொள்பவர்களும் இங்கே  இருக்கதான் செய்கிறார்கள். அப்படி ஒருவராக காய்களை கனகச்சிதமாக நகர்த்தி காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த எக்ஸ் நடிகை. சினிமாவில் சிறு வயது முதலே இருந்தாலும் அவருக்கு கதாநாயகி ஆகி புகழின் உச்சிக்கு செல்லவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

அதற்காக பலரிடமும் வாய்ப்புகளைக் கேட்டு அலைந்துகொண்டிருந்த போதுதான் அவருக்கு Y என்ற இயக்குனர் அறிமுகமாகிறார். அந்த நாயகியை மிகவும் பிடித்துவிட அவருக்கு வாய்ப்புக் கொடுப்பதாக சொல்லி நட்பாக பழக ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரின் ஆரம்ப கால நட்பு நாட்கள் செல்ல செல்ல வேறொரு கோணத்தில் செல்ல ஆரம்பித்துள்ளது.

அந்த நடிகைக்கு அறிவுரை சொல்வது போல “சினிமா என்றால் ஈஸியான விஷயம் இல்லை. இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கு. நிறைய அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். அதுக்கெல்லாம் ரெடியா இருந்தா பெரிய ஆளா வரலாம்” என நைசாக காய் நகர்த்தியுள்ளார். அவரின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட அந்த இளம் நடிகை ‘சார் இதெல்லாம் எனக்கு தெரியாதா… நான் எல்லாத்துக்கும் தயாராதான் வந்திருக்கேன். எனக்கு எப்படியாவது சினிமாவுல சாதிக்கணும்” என அவரின் அழைப்புக்கு இணங்கிவிட்டாராம்.

இதையடுத்து அவருக்கு வாய்ப்புகளைக் கொடுத்துவரும் இயக்குனர் தன்னுடைய நண்பர்களிடம் பரிந்துரை செய்து வருகிறாராம். ஆனால் அவர்களின் இந்த கூடா நட்பு இப்போது திரையுலகம் முழுவதும் பரவ ஆரம்பித்து விட்டதாம். ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அந்த நடிகை சினிமாவில் சாதிக்க தயாராகிவிட்டாராம்.