தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் லட்சுமி. இவர் தமிழ் சினிமாவில் இருந்து தேசிய விருது வாங்கிய பெருமைக்குரியவர். ரஜினி, கமலுக்கு எல்லாம் சீனியரான இவர் அவர்களோடு இணைந்தும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரின் இரண்டாவது கணவரான மோகன் சர்மா ஒரு நேர்காணலில் தங்களுடைய திருமண வாழக்கையைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் மோகன் சர்மா பற்றியும் லட்சுமியுடன் அவரின் திருமணம் மற்றும் விவாகரத்து பற்றியும் பரபரப்பான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “லட்சுமி ஒரு திறமையான நடிகை. சாவித்ரி, பத்மினி, சரிதா போன்றவர். அவருக்கு எப்போதுமே தன்னம்பிக்கை அதிகம். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு சென்ற பிறகும் சினிமாவில் நடிக்கும் ஆசை குறையவில்லை.
பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் லட்சுமி. அவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகள் பிறந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று லட்சுமி சொன்னபோது, அதை பாஸ்கர் குடும்பம் எதிர்த்துள்ளது. அதனால் தம்பதிகளுக்குள் சண்டை வர இருவரும் பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யா தன் தாயோடு வந்துவிட்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் போதுதான் அவருக்கு மோகன் சர்மாவோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஒருமுறை அவரை லட்சுமி ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்ல அவரும் சென்றிருக்கிறார். ஷாப்பிங் முடித்து மோகனை ரூமிற்கு அழைத்து அவருடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பி இருக்கிறார் லட்சுமி. ஆனால் மோகன் சர்மா, நான் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறி குங்குமமும் தாலியும் வாங்கி கட்டியிருக்கிறார்.
ஐஸ்வர்யாவும் அவர்களோடே வசித்தார். மோகன் ஷர்மாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே பாசப்பிணைப்பு இருந்தது. அவரை தந்தையாகவே பார்த்தார் ஐஸ்வர்யா.
இந்நிலையில் லட்சுமி பல பேரோடு மோகனுக்கு தெரியாமல் பேசுவதை ஐஸ்வர்யா தந்தையிடம் சொல்லியுள்ளார். இதனால் லட்சுமிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் சண்டை வந்து இருவருமே பிரிந்து சென்றுள்ளனர். மகள் வந்து புகார் சொல்லும்படி இப்படி நீ நடந்துகொள்ளலாமா என மோகன் கேட்க, அவரிடம் கோபமாக பேசியுள்ளார் லட்சுமி. அதன்பிறகு மோகன் சர்மாவும் லட்சுமியை விட்டு பிரிந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
