Tuesday, September 22, 2026
Home > Cinema > என்னை படுக்கைக்கு வரசொல்லி …அதுவும் அம்மாவிடம் !! அழைத்த அந்த இயக்குனர்… யாஷிகா ஆனந்த் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

என்னை படுக்கைக்கு வரசொல்லி …அதுவும் அம்மாவிடம் !! அழைத்த அந்த இயக்குனர்… யாஷிகா ஆனந்த் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்துள்ள ஒரு நேர்காணலில் திரையுலகில் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் என்னுடைய அப்பாவை போல மதிக்கும் ஒரு மூத்த இயக்குனர், என்னை ஆடிசனுக்கு வரசொல்லி போட்டோ எல்லாம் எடுத்தார் . பின்னர் என்னை வெளியே இருக்க சொல்லிவிட்டு என் அம்மாவிடம் தனியாக பேசினார்.

அப்போது அவரிடம் யாஷிகா என்னோடு படுக்கைக்கு வர சம்மதித்தால் அவருக்கு நான் வாய்ப்பளிக்கிறேன் என என் அம்மாவிடமே கேட்டுள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த இயக்குனரின் பெயரை சொன்னால் எனக்கு மேலும் பிரச்சனைகள் வரும் என்பதால் நான் அதை சொல்லவில்லை.

இதே போல நான் வசிக்கும் பகுதிக்கு அருகே இருக்கும் ஒரு  போலீஸ் அதிகாரி என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். அவரை பற்றி நான் புகார் கொடுத்ததும் அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.” எனக் கூறியுள்ளார்.