Thalapathi Vijay GOAT movie Story : விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸானது. படம் முதல் காட்சி பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வர தொடங்கின. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என சொல்லி வந்தாலும், டிவிட்டரில் பொதுவான ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஆனாலும் இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக அமைந்தது. இதையடுத்து விஜய் தற்போது வெங்கட் பிரபு இய்ககத்தில் “The GOAT” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. போஸ்டரில் வயதான மற்றும் இளமையான தோற்றத்தில் விஜய் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.
GOAT movie Time Travel story ?
இந்த படம் டைம் டிராவல் பற்றிய கதை என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் படம் விண்வெளிப் பயணம் பற்றியதாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்துள்ளனர்.

அதற்குக் காரணம் போஸ்டரில் விமானம் ஒன்று இடம்பெற்றுள்ளது. போலவே விஜய் விண்வெளி பயணத்துக்கான உடையோடு இடம்பெற்றுள்ளார். அதில் ஒரு விஜய் வயதான தோற்றத்திலும் இன்னொரு விஜய் இளமையான தோற்றத்திலும் இருக்கிறார்.
Vijay’s GOAT movie a Alien Movie ?
#ThalapathyVijay Alien-கிட்ட மாட்டுனா எப்படி இருக்கும்?😱💥 – Venkat Prabu | Thalapathy 68#VenkatPrabhu #Thalapathy68 #Thalapathy #Vijay #Throwback #Galatta pic.twitter.com/joirjp1nOy
— Galatta Media (@galattadotcom) September 1, 2023
இதனால் இளமையான விஜய் விண்வெளி பயணத்துக்கு முந்தையவர் என்றும், வயதான விஜய் விண்வெளிப் பயணம் செய்து அதில் தனது வயதை இழந்தவர் என்றும் ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில் இந்த படம் 2019 ஆம் ஆண்டு வில் ஸ்மித் நடித்த “தி ஜெமினி மேன்” என்ற படத்தின் தழுவல் என்று கூறிவருகின்றனர்.
