நடிகர் விஷாலின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் அவரின் லத்தி திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார்.
அப்படி ஒரு நேர்காணலில் பேசிய அவர் “ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க என்னையும் அனுகினார்கள். உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் உதவும். அதனால் நான் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து விமர்சனங்களை எதிர்கொள்ளும் சரத்குமாரை சீண்டும் விதமாக விஷாலின் இந்த கமெண்ட் அமைந்துள்ளது.
நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இருவருக்கும் கடுமையான வார்த்தை மோதல்கள் முன்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
