Friday, April 17, 2026
Home > Cinema > செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை… முழுவிவரம் உள்ளே!

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை… முழுவிவரம் உள்ளே!

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள நான்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கியான செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஆலோசகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலை முடித்திருக்க வேண்டும். 65 வயதுக்கு கீழுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்கு எந்த கட்டணமும் இல்லை. நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்ய பணிக்கப்படுவார்கள். வேலைக்கான சமபளமாக 15000 முதல் 25000 ரூபாய் வரை வழங்கப்படும்.