நடிகை அபிராமி கேரளாவில் பிறந்த இவர் பள்ளி படிப்பை கேரளாவில் முடித்தார் பின்னர் அபிராமியின் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு சென்று கல்லூரி படிப்பை முடித்த இவர்.

பின்னர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்தியா வந்தார். சொந்த ஊரான கேரளா வந்த அபிராமி கேரளாவில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

மேலும் சிறு வயதில் இருந்தே சில படங்களில் நடித்துள்ளார் அபிராமி அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வரவே தொடர்ந்து மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.

2001 ஆம் ஆண்டு வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபிராமி.அதன் பின்னர் தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ், மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்த அபிராமி . 2004 ஆம் ஆண்டு விருமாண்டி படத்தில் நடித்தார் .

சினிமாவில் உச்சத்தை நெருங்கி வந்த அபிராமி திடீரென விருமாண்டி படத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து ஓய்வுபெற்ற அபிராமி அமெரிக்கா சென்று அங்கு படித்து ஒரு நிறுவனத்தில் வேலையும் செய்து வந்தார்.

2014 ஆம் ஆண்டு இவரை மீண்டும் மலையாள சினிமா அழைக்கவே 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சினிமாவிற்கு வந்தார் . மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்துவந்த இவர் . மாறா படத்தில் தமிழில் நடித்தார்.

பின்னர் கடந்தாண்டு வெளியான நித்தம் ஒரு வானம் படத்திலும் நடித்திருந்தார் அபிராமி.இப்போது ஆர் யூ ஓகே பேபி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அபிராமியின் சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.

summary In English: Abhirami is an South Indian actress. Abhirami works on Malayalam, Tamil , Telugu and Kannada movies. Abhirami was born in Kerala. Abhirami became Tv Host during her college days. And Abhirami started acting in Malayalam movies. In 2001 Abhirami debuted in Tamil movie Vanavil. Abhirami became famous after Virumandi movie. She Quit acting and moved to Us in 2004 for almost 10 years unitl 2014 she settled in US. Now she is acting in movies. Some photos of actress Abhirami is for you in this post.
