Saturday, May 18, 2024
Home > Cinema > ரசிகர்களை சோதிக்கும் திரைக்கதை…  வாரிசு படத்தைக் காப்பாற்றினாரா  ‘ஆட்ட நாயகன்’ விஜய்? Varisu movie Review

ரசிகர்களை சோதிக்கும் திரைக்கதை…  வாரிசு படத்தைக் காப்பாற்றினாரா  ‘ஆட்ட நாயகன்’ விஜய்? Varisu movie Review

 விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில் படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன.

சூர்யவம்சம் படத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் பண்ணியது போல ஒரு கதை. அப்பா சரத்குமாருக்கும் மூன்றாவது மகன் விஜய்க்கும் ஆகவே ஆகாது. அப்பாவின் தொழிலதிபர் அடையாளத்துக்குள் புகுந்து வாழ்க்கையை ஓட்டாமல் தனக்கான அடையாளத்தை தேட வீட்டை விட்டு செல்கிறார்கள். அண்ணன்களான ஸ்ரீகாந்தும், ஷாமும் அப்பாவுக்குக் கட்டுப்பட்டு தொழிலைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

`

தொழிலில் வில்லனாக வரும் பிரகாஷ் ராஜால் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை உருவாக, குடும்பத்தில் கசப்பு உருவாகி உடையும் சூழ்நிலையில் இருக்க, உள்ளே வரும் விஜய், குடும்பத்தை இணைத்தாரா, தொழில் எதிரியான பிரகாஷ் ராஜை எப்படி வெற்றிகொண்டார் என்பதை 2 மணி நேரம் 50 நேர திரைக்கதையாக உருவாக்கியுள்ளார் வம்சி.

முதல் பாதியில்  விஜய் இல்லாத காட்சிகள் எல்லாம் தேமே என்று சொல்ல, விஜய்யும் யோகி பாபுவும் செய்யும் காமெடிகள் மட்டுமே கொஞ்சம் ஆறுதல். விஜய் ராஷ்மிகா காதல் காட்சிகளும் ஒட்டவில்லை. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் ஒட்டவில்லை. 10 நிமிடம் கத்தி ஆரவாரம் செய்யும் ரசிகர்கள் அதன் பின் மௌன அஞ்சலிக்கு நிலைக்கு சென்று விடுகிறார்கள்.

```
```

விஜய்யும் பிரகாஷ் ராஜும் தமிழ் சினிமாவின் டெட்லி ஹீரோ வில்லன் காம்போ. ஆனால் அது கூட இந்த படத்தில் வொர்க் அவுட் ஆகவில்லை. எங்கெங்கோ இழுத்துக்கொண்டு செல்லும் திரைக்கதையும் எப்படியோ முடிந்து ரசிகர்களை ‘அப்பாடா’ என சொல்ல வைக்கிறது.

வழக்கம்போல விஜய் பாடல்களில் அட்டகாசமாக ஆடி ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கிறார். ராஷ்மிகா படத்தில் ஹீரோயினா இல்லை பாடலுக்கு மற்றும் சிறப்புத் தோற்றத்தில் வருகிறாரா என சந்தேகம் எழுகிறது. ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே இருந்தும், யாருடைய கதாபாத்திரத்துக்கும் வலு இல்லை. குடும்ப ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வாரிசு படத்தை குடும்பங்கள் கொண்டாடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.