Saturday, August 22, 2026
Home > Cinema > “அண்ணா வாரிசு படத்தோட துணிவு வருது”… விஜய் ரியாக்‌ஷன் என்ன? – பிரபல நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!

“அண்ணா வாரிசு படத்தோட துணிவு வருது”… விஜய் ரியாக்‌ஷன் என்ன? – பிரபல நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது. பொங்கலுக்கு அஜித்தின் துணிவோடு மோதும் வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஐதராபாத்தில் 10 நாட்கள் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் தற்போது பகிர்ந்துள்ள தகவல் ஒன்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதில் “நான் விஜய்யிடம் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்று சொன்னேன். அதற்கு அவர் ‘வரட்டுமே, அவரும் நம்ம நண்பர்தான். ரெண்டு படமும் நல்லா ஓடட்டும்’ எனக் கூறினர்” என தெரிவித்துள்ளார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.