Saturday, May 2, 2026
Home > Cinema > திடீரென்று நடந்த மாற்றம்… ஷாருக் கான் படத்தில் விஜய் நடிக்கவில்லையா?

திடீரென்று நடந்த மாற்றம்… ஷாருக் கான் படத்தில் விஜய் நடிக்கவில்லையா?

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் படத்தின் ஷுட்டிங் சென்னையில் ஒரு மாதகாலமாக நடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்துள்ள தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான அட்லிக்காக அவர் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஒரு மாதமாக நடந்தது. அப்போது விஜய் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சென்னை ஷூட்டிங்கே முடிந்துள்ள நிலையில் விஜய் இதுவரை அந்த படத்தில் நடிக்கவில்லை. இனிமேலும் அவர் நடிக்கப் போவதில்லை என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.