Monday, July 6, 2026
Home > Cinema > இன்னும் கிளைமேக்ஸ்- ஏ எடுக்கலயா?… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வாரிசு குழு!

இன்னும் கிளைமேக்ஸ்- ஏ எடுக்கலயா?… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வாரிசு குழு!

விஜய் நடிக்கும் வாரிசு  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

பொங்கலுக்கு அஜித்தின் துணிவோடு மோதும் வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஐதராபாத்தில் 10 நாட்கள் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் படத்தின் டப்பிங் உள்ளிட்ட பின் தயாரிப்பு பணிகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.