Friday, March 29, 2024
Home > Cinema > தலைவர் தரிசனம்… ஜெயிலர் பட க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த சன்பிக்சர்ஸ்!

தலைவர் தரிசனம்… ஜெயிலர் பட க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த சன்பிக்சர்ஸ்!

அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

`

வரிசையாக ரஜினி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல ரஜினியின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

```
```

இப்போது விறுவிறுப்பாக ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரையில் 50 சதவீதத்துக்கும் மேலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தளவுக்கு வேகமாக நெல்சன் காட்சிகளை படமாக்க, படக்குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம் ரஜினி.

சத்தமில்லாமல் நடந்து வந்த ஜெயிலர் ஷூட்டிங் பாதிக்கு மேல் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சில நாட்களாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் இப்போது கிளிம்ப்ஸ் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்தின் பல ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இடம்பெற்றுள்ளன.