Friday, April 17, 2026
Home > Cinema > இன்னும் 5 மணிநேரம்தான்… பட்டாசாய் வந்த துணிவு வீடியோ!

இன்னும் 5 மணிநேரம்தான்… பட்டாசாய் வந்த துணிவு வீடியோ!

துணிவு படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார்.. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்தோடு வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ள நிலையில் பல சின்னத்திரை நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்னும் 5 மணிநேரமே உள்ள நிலையில் துணிவு படத்தின் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.