Friday, May 3, 2024
Home > செய்திகள் > விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட்..! மக்களுக்கு பதில்சொல்வார்களா போராட்டக்காரர்கள்..?

விற்பனைக்கு வந்த ஸ்டெர்லைட்..! மக்களுக்கு பதில்சொல்வார்களா போராட்டக்காரர்கள்..?

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இயங்கிவந்த பிரபல தாமிர ஆலையான ஸ்டெர்லைட் சில அந்நியசக்திகளின் தூண்டுதலால் 2018ல் பெரிய போராட்டமாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். தெரிந்தோ தெரியாமலோ அந்த போராட்ட நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யாரும் செல்லவில்லை. அதேபோல போராட்டம் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகள் சூறையாடப்பட்டதோடு பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.


இதன்காரணமாக ஸ்டெர்லைட் ஆலை இழுத்துமூடப்பட்டது. அதன்பின்னர் சில நாட்களிலேயே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்ப ஆரம்பித்தனர். வேதாந்தா குழுமத்தின் இந்த ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவிகிதத்தை உற்பத்தி செய்துவந்தது. இதன்மூலம் நாட்டின் கருவூலத்திற்கு 2500 கோடி பங்களிப்பு செய்தது.

தூத்துக்குடி துறைமுகத்தின் வருவாயில் 12 சதவிகிதமும் தமிழ்நாட்டில் சல்பரிக் ஆசிட் சந்தை தேவையில் 95 சதவிகித பங்கையும் வழங்கியது. அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை நேரடியாக 5000 பேருக்கும் மறைமுகமாக 25000 பேருக்கும் மேலானோருக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தியிருந்தது. ஆனால் தற்போது ஆலை மூடப்பட்டதால் காப்பர் சந்தையில் சீனா தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டதுடன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளதாக தெரிகிறது.

`

இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள வேதாந்தா குழுமத்தின் தலைமையகத்திலிருந்து ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளம்பரத்தில் ” வேதாந்தா நிறுவனம் ஆக்சிஸ் கேபிடலுடன் இணைந்து ஸ்டெர்லைட் ஆலையை முதன்மை மாற்று இரண்டாம்நிலை யூனிட்கள், சல்பரிக் அமில ஆளை தாமிரம் ஆகியவற்றை உள்ளடக்கிய விற்பனைக்கு ஆர்வமாக உள்ளோம்.

```
```



சுத்திக்கரிப்பு ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் கேப்டிவ் மின் உற்பத்திநிலையங்கள் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புவளாகங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளது” என வேதாந்தா குழுமம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் தனது ஆலையை நிறுவலாம்.

ஆனால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் தமிழகத்திற்கு மட்டுமே என்பதை போராட்டத்தை தூண்டியவர்களும் அதை வழிநடத்தியவர்களும் உணர்வார்களா என ஸ்டெர்லைட் முன்னாள் ஊழியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.