ஷ்ரியா ஷர்மா சில்லுனு ஒரு காதல் படத்தில் சூரியா ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தார் . அதற்கு முன்னர் ஜெய் சிரஞ்சீவி என்ற தெலுங்கு படத்தில் நடதிருந்தார்.


1997 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா ஷர்மா 2005 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்களை தாண்டி பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த ஷ்ரியா ஷர்மா 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

ஷ்ரியா ஷர்மாவின் தந்தை ஒரு என்ஜினியர் . தாய் ஒரு உணவியல் நிபுணர். சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். ஷ்ரியா ஷர்மாவுக்கு ஒரு தம்பியும் உண்டு.


2016 ஆம் ஆண்டிற்கு பிறகு திரை துறையில் இருந்து ஒதுங்கிய ஷ்ரியா ஷர்மா படிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது சட்ட படிப்பை முடித்துள்ள ஷ்ரியா ஷர்மா . பயிற்சி வழக்கறிஞர்ராக பணியாற்றி வருகிறார்.


இவர் 2011 ஆம் ஆண்டு சில்லர் பார்ட்டி என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரதிற்கான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரியா ஷர்மா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.










Summary In English: Shriya Sharma is an actress . Shriya Sharma acted in many movies as a child artist . In 2006 Shriya Sharma acted in sillunu oru kathal as a daughter of Surya and jothika . Shriya Sharma got national award for best child artist in 2011. Shriya Sharma quit acting after 2016 and concentrated on studies. Now Shriya Sharma completed her law degree and Working as a training lawyer. Shriya Sharma instagram has 400k followers. Some photos of Shriya Sharma are for you in this Article.