விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணு காந்த் திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்து செய்த அதிர்ச்சி தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் திருமண புகைப்படங்களை நீக்கினர்.

விவாகரத்துக்குப் பிறகு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா மீது வைத்த ஒரு குற்றச்சாட்டு பகீர் கிளப்பியது. அதில் அவர் “சம்யுக்தா தன் தோழி ஒருவரோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.” எனக் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இப்போது சம்யுக்தா பதிலளித்துள்ளார். அதில் “நான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் என் பார்ட்னர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. என் தோழியின் பெயரை சொல்லியிருந்தால் விஷயம் வேறு மாதிரி ஆகியிருக்கும். ஏனென்றால் என் தோழி மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர். அவருடைய பெயரை சொல்லியிருந்தால் விஷ்ணுகாந்தின் வாழ்க்கை காலியாகி இருக்கும்.

அதனால்தான் அவர் பெயரை சொல்லாமல், இப்படி பேசியிருக்கிறார். அவர் உண்மையை சொல்லி இருந்தால் பெயரை சொல்லியே பேசியிருக்கலாம். ஆனால் அவர் குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்பதற்காகவே என் மீது அபாண்டமான அவதூறை செய்துள்ளார்.” எனக் கூறி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
