Monday, May 13, 2024
Home > Cinema > மாரிமுத்து இல்லைன்னாலும் கெத்து காட்டும் எதிர்நீச்சல்… இந்த வார டி ஆர் பியில் டாப் 5 சீரியல்ஸ்!

மாரிமுத்து இல்லைன்னாலும் கெத்து காட்டும் எதிர்நீச்சல்… இந்த வார டி ஆர் பியில் டாப் 5 சீரியல்ஸ்!

தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர்.

ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன. மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டி ஆர் பி புள்ளிகள் மூலமாக வரிசைப்படுத்தப்படுகின்றன. வாரம் வாரம் எந்த சீரியல் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என டி ஆர் பி புள்ளிகள் மூலமாக அறியப்படுகின்றன.

`

அந்த வகையில் கடந்தவார சீரியல்களில் டாப் 5-ல் அனைத்து இடங்களையும் சன் தொலைக்காட்சி சீரியல்களே இடம்பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தில் ரிஷி மற்றும் ஆல்யா மானசா நடிக்கும் இனியா தொடர் பெற்றுள்ளது.  நான்காவது இடத்தில் சன் தொலைக்காட்சியின் ப்ரைம் டைம் சீரியல் வானத்தைப் போல இடம் பிடித்துள்ளது.

```
```

அடுத்த இடமான மூன்றாவது இடத்தில் சுந்தரி 9.79 புள்ளிகளோடு மூன்றாம் இடத்திலும், சைத்ரா ரெட்டி நடிக்கும் கயல் தொட்ர 10.74 ரேட்டிங் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.

எப்போதும் போல நம்பர் 1 இடத்தில் சன் தொலைக்காட்சியின் வைரல் சீரியலான எதிர்நீச்சல் 10.79 ரேட்டிங்கோடு இருக்கிறது. இந்த சீரியலின் பிரம்மாண்ட வெற்றிக்குக் காரணம் அதில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துதான். அவர் சமீபத்தில் எதிர்பாராத விதமாக காலமானதை அடுத்து இந்த சீரியலில் அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.