Tuesday, May 21, 2024
Home > Cinema > வாடகைத் தாய் முறை சரியானதா?…. சமந்தா சொன்ன பதில் இதுதான்!

வாடகைத் தாய் முறை சரியானதா?…. சமந்தா சொன்ன பதில் இதுதான்!

சமீபத்தில் நயன்தாரா வாடகைத் தாய் முறை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டது சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது.

`

சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வாடகைத் தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் நவம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இதற்கான ப்ரமோஷன்களில் கலந்துகொண்டு வருகிறார்.

```
```

அதில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வது சரியானதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “எனக்கு எதைப்பற்றியும் முன்கருத்துகள் இல்லை.  நான் எதையும் முன் தீர்மானத்தோடு அனுகுவதில்லை. யாராவது என்னிடம் எதாவது சொன்னால் நான் என்னுடையக் கருத்தை மாற்றிக்கொள்வேன்.” என மழுப்பலான பதில் ஒன்றை சமாளித்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டு சர்ச்சைகள் உருவாகி அடங்கிய நிலையில், இந்த படம் அதே கதைக்களத்தோடு ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.