Friday, August 21, 2026
Home > Cinema > ரஜினி சிறப்பு தோற்றம்… ஏ ஆர் ரஹ்மான் இசை… ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ முதல் லுக்!

ரஜினி சிறப்பு தோற்றம்… ஏ ஆர் ரஹ்மான் இசை… ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ முதல் லுக்!

அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் வரை முடிவடைந்துள்ளதாம்.

இதற்கிடையில் ரஜினிகாந்த், தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்துக்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடந்துள்ளதை அடுத்து முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.