நடிகர் வடிவேலு நகைச்சுவை ஜாம்பவானாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.
நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை.
இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இயக்குனர் சிம்புதேவன் தரப்புக்கும் வடிவேலு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கிடப்பில் போடப்பட்டது.
பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் வடிவேலு அந்த படத்தில் மீண்டும் நடிக்க மறுத்தார். இதையடுத்து இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2 மற்றும் மாமன்னன் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் முதல் முறையாக அவர் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஜி வி பிரகாஷ் குமார், அடுத்து இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்தில்தான் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
