ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கடலூரில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினிகாந்த் அடுத்து இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தில் அரவிந்த் சாமி நடிக்க உள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது வடிவேலு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி வடிவேலு கூட்டணி சந்திரமுகி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டது.
