Thursday, May 21, 2026
Home > Cinema > மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி… ஹெச் வினோத் படத்தின் அடுத்த அப்டேட்!

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி… ஹெச் வினோத் படத்தின் அடுத்த அப்டேட்!

அஜித் – ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இப்போது துணிவு படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த படம் சமீபத்தில் தாய்லாந்தில் இறுதிகட்ட ஷூட்டிங்கை முடித்துள்ளனர். அதையடுத்து படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இதையடுத்து ஹெச் வினோத், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா இல்லை வேறு நடிகர்கள் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கமல் அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படம் கமல்ஹாசனின் 233 ஆவது படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியும், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் விக்ரம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.