Thursday, June 4, 2026
Home > Cinema > நைட் 10 மணிக்கு என்ன அத பாக்க சொல்லி டார்ச்சர்… முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணிருப்பேன் – ரவீந்தர் புலம்பல்!

நைட் 10 மணிக்கு என்ன அத பாக்க சொல்லி டார்ச்சர்… முன்னாடியே தெரிஞ்சிருந்தா டைவர்ஸ் பண்ணிருப்பேன் – ரவீந்தர் புலம்பல்!

தமிழ் சீரியல்களை பார்ப்பவர்களுக்கு ஓர் அளவு பரிசையமானவர் தான் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி , இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் . தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தான் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மஹாலக்ஷ்மி . இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் . அன்று முதல் இவர்கள் தான் டாக் ஆப் தி டவுன் .

திருமணம் முடிந்த கையோடு பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தனர் ரவீந்தர் மஹாலக்ஷ்மி ஜோடி.மேலும் பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டார் என்று கூட ட்ரோல்கள் வந்தது. அதற்கும் அவர்கள் பதிலடி கொடுத்தனர்.

திருமணத்திற்கு பிறகும் மஹாலக்ஷ்மி தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் நடிப்பதை நிறுத்த போகிறார் என தகவல் வெளியாகின. ஆனால் அவர் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இடையில் ரவீந்தர் ஒரு மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட போது மகாலட்சுமி அவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் பரவின. ஆனால் ரவீந்தர் வெளியே வந்து அதெல்லாம் பொய் எனக் கூறினார்.

இந்நிலையில் ரவீந்தர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன் மனைவி மகாலெட்சுமி தன்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்கிறார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “அவள் நடித்த அன்பே வா சீரியலை தினமும் 10 மணிக்கு பார்க்க சொல்லி என்னை டார்ச்சர் பண்ணுகிறார். என்னால் அந்த சீரியலை பார்க்க முடியவில்லை. மேற்கொண்டு என்னை அந்த சீரியலுக்கு விளம்பரம் வேறு செய்ய சொல்கிறார்.

அவர் இந்த சீரியலில் நடிப்பது தெரிந்திருந்தால் நான் அவரை விவாகரத்தே செய்திருப்பேன் “ என ஜாலியாக பேசியுள்ளார்.