நடிகர் ஜீவா நடித்த சிங்கம்புலி திரைப்படம் ஒன்றும் பெரிய வெற்றிப்படம் இல்லை. ஆனால் அந்த படத்தின் சில கில்மா காட்சிகள் பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இன்றளவும் வைரலாகி வருகின்றன. நடிகர் ஜீவா இந்த படத்தில் ஒரு ப்ளே பாயாக நடித்திருப்பார். படத்தில் அவர் பல பெண்களுடன் உறவில் இருப்பது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
அருவருப்பின் உச்சமாக இந்த காட்சிகள் இருந்தாலும், இளசுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்த படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் மிகவும் வைரலானது ஜீவா தன் தோழி மற்றும் தோழியின் அம்மா ஆகிய இருவரையும் கரெக்ட் செய்வது போன்ற காட்சிதான்.

இந்த காட்சியில் நடித்தவர்தான் நீலு நஸ்ரின். இவரை ரசிகர்கள் பலரும் நீலு ஆண்டி என்றே அழைத்து வருகின்றனர். இவருக்கும் ஜீவாவுக்கும் இடையிலான காட்சி ஆபாசமான வகையில் இருக்கும். அதுபற்றி இப்போது ஒரு நேர்காணலில் நீலு கூறியுள்ளார்.

அதில் “என்னிடம் என்ன சொன்னார்களோ அதைதான் படத்தில் ஷூட் செய்தார்கள். ஆனால் காட்சியை வரிசையாக எடுக்காமல் மாற்றி மாற்றி எடுத்தார்கள். அதனால் படத்தில் இடம்பெறும் போது அந்த காட்சியின் தாக்கம் இப்படி இருக்கும் என தெரியவில்லை. நான் நடந்து செல்லும் போது என்னுடைய பின்பகுதியை ஜூம் செய்து ஷூட் செய்தார்கள்.

காட்சியையும் எடுத்துவிட்டார்கள் படமும் ரிலீஸாகிவிட்டது. நம்மால் இனி ஒன்றும் செய்ய முடியாது என விட்டுவிட்டேன். அந்த படத்துக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எல்லா வேடமும் அதே போல வேடமாக வந்ததால் சினிமாவே வேண்டாம் என ஓடிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். இப்பொது நீலு ப்யூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
