இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.
ஒருவழியாக இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. 6 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு கிராபிக்ஸ் காட்சிகள் எந்த குறையும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டதும் ஒரு காரணம். படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளின் வேலைகள் எல்லாம் மும்பையில் உள்ள ஷாருக் கானி ரெட் சில்லீஸ் நிறுவனத்தில்தான் மேற்கொள்ளப்பட்டதாம். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ரெட் சில்லீஸ் நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
