Saturday, August 22, 2026
Home > Cinema > அடுத்த படத்தை தமிழ் இயக்குனரோடு பேச்சுவார்த்தை நடத்துகிறாரா அமீர்கான்?

அடுத்த படத்தை தமிழ் இயக்குனரோடு பேச்சுவார்த்தை நடத்துகிறாரா அமீர்கான்?

அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

பாலிவுட்டுக்கு கடந்த சில ஆண்டுகள் மிக மோசமான ஆண்டுகளாக அமைந்துள்ளன. அங்கு பெரிய பொருட்செல்வில் எடுக்கப்படும் படங்கள் வெற்றி பெறுவதில்லை. இதில் ஷாருக் கான், அமீர்கான் மற்றும் சல்மான் கான் ஆகியோரின் படங்களும் அடக்கம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமீர்கான் நீண்ட காலமாக உருவாக்கி வந்த லால் சிங் சட்டா திரைப்படம் ரிலீஸானது. ஆனால் பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.

இதே போலவே சல்மான் கான் மற்றும் ஷாருக் கானின் சமீபகால படங்களும் வெற்றி பெறவில்லை. இதனால் பாலிவுட்டில் ஒரு தேக்க நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அமீர்கான் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க ஒரு தமிழ் இயக்குனரை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கல்யாண சமையல் சாதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா, லால் சிங் சத்தா படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்ட போது அவருக்கும் அமீர்கானுக்கும் ஏற்பட்ட நட்பால் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.