சமூகவலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவற்றின் வருகைக்குப் பிறகு சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போல ரசிகர்கள் இடையே மிகுந்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சீரியலில் கலக்கிய பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் போன்றவர்கள் இப்போது சினிமாவிலும் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் பிரபலமாக இருந்து வரும் ஒரு சீரியல் நடிகைதான் பவித்ரா கவுடா. இப்போது கண்ணே கலைமானே என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பவித்ரா. கர்நாடகாவை சேர்ந்த இவர் இப்போது தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவரும் நடிகர் அமல்ஜித்தும் ஒரு சீரியலில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே அதை உறுதிப் படுத்தவில்லை. ஆனால் ஒன்றாக பல இடங்களில் ஜாலியாக சுற்றி வந்தனர்.

இந்நிலையில் இப்போது தங்கள் காதலை பவித்ரா- அமல்ஜித் தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் தங்கள் காதலுக்கு தங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். இந்த தகவல் இருவரின் ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதன்– ரேஷ்மா, ஷபானா-ஆர்யன் போன்ற சீரியல் ஜோடிகள் ரியல் ஜோடிகளான வரிசையில் இப்போது பவித்ரா மற்றும் அமல்ஜித் ஆகியோரும் இணைய உள்ளனர். இப்போது இருவரும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.
