2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் பேன் இந்தியா அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டவர்கள் நடிக்க சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கு அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பர் வேடத்தில் நடித்திருந்தார் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. அவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து இப்போது புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெகதீஷ் இப்போது ஒரு பெண்ணின் தற்கொலை வழக்கில் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகதீஷ் கடந்த சில ஆண்டுகளாக ஒரு துணை நடிகையோடு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை தன்னுடைய மகளின் தற்கொலைக்குக் காரணம் ஜெகதீஷ்தான் என போலீஸில் புகாரளித்துள்ளார். தன் மகளை ஜெகதீஷ் நீண்டகாலமாக துன்புறுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டினார் என்று புகாரளிக்க, அதையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் இருவரின் செல்போனையும் ஆராய்ந்ததில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து இப்போது ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இவரின் கைது ஷூட்டிங்கை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவரின் கைது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
