Thursday, June 4, 2026
Home > Cinema > உங்க 5 பேருக்கும்..தம்மு வாங்கி கொடுத்தே பிக் பாஸ் சொத்து அழிஞ்சிடும் போல…நிக்ஸன் & ஐஷு சிக்கிய வீடியோ வைரல்!

உங்க 5 பேருக்கும்..தம்மு வாங்கி கொடுத்தே பிக் பாஸ் சொத்து அழிஞ்சிடும் போல…நிக்ஸன் & ஐஷு சிக்கிய வீடியோ வைரல்!

தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. தொடர்ந்து 7 சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் இந்த சீசனில் அவ்வளவாக சூடுபிடிக்கவில்லை. அதனால் செயற்கையாகவே பல பரபரப்புகளை உருவாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் பவா செல்லத்துரையை அனைவரும் டார்கெட் செய்து வெளியேற்றியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப் ஆண்டனியை வெளியேறியது என சர்ச்சைகள் காரணமாக பிக்பாஸ் கவனம் பெற்று வருகிறது.

இந்த முறை போட்டியாளராக சென்றுள்ள பூர்ணிமா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து பூர்ணிமாவின் செயல்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், பூர்ணிமாவை சில கேள்விகள் கேட்டு, அவரின் குறைகளை சுட்டிகாட்டி பேசினார். அதில் இருந்து அம்மணி பயத்தில் உலாவி வருகிறார் பிக்பாஸ் வீட்டில் . இந்நிலையில் இந்த வாரம் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் ப்ரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர்.

இந்துஜாவும், பூர்ணிமாவும் கல்லூரி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்த நட்பின் காரணமாக இந்துஜா பூர்ணிமாவிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பூர்ணிமாவிடம் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. இதனால் மனமுடைந்து சக பிக்பாஸ் போட்டியாளரான மாயாவிடம் அழுது புலம்பினார் பூர்ணிமா.

அதே போல நிக்ஸனும் அங்கிருக்கும் எல்லா பெண்களிடமும் வழிந்து வெளியே இருக்கும் ரசிகர்களிடம் ஓவராக வெறுப்பை சம்பதித்து வருகிறார். இந்நிலையில் அவரும் ஐஷுவும் எப்போதும் ஸ்மோக்கிங் ஏரியாவிலேயே இருந்துகொண்டு புகையாக ஊதித்தள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் இருவரும் ஸ்மோக்கிங் ஏரியாவில் தம்மடிக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.