தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு வந்து இன்னும் ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லை. அவரின் ஆச்சார்யா, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் எனப்தற்காக மலையாள படமான லூசிபட் ரீமேக்கைக் கையில் எடுத்தனர். இதில் நடிக்க முன்னணி நாயகியான நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். சல்மான் கான் கௌரவ வேடத்தில் நடிக்க மோகன் ராஜா இயக்கினார்.
கடந்த வாரம் ரிலீஸான இந்த படத்தை தெலுங்கு பிராந்தியத்தைத் தவிர வேறு எங்கும் ரிலீஸ் செய்யவில்லை. ரிலீஸாகி 3 நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து நல்ல கலெக்ஷன் கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் இப்போது தமிழ்நாட்டில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. தெலுங்கிலேயே இந்த படத்தை அக்டோபர் 14 ஆம் தேதியில் இருந்து ரிலீஸ் செய்கின்றனர்.

மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் வேடத்தில் நயன்தாராவும், பிருத்விராஜ் வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
