Saturday, August 22, 2026
Home > Cinema > போனி கபூருக்கே ஷாக் கொடுத்த ரசிகர்கள்… அஜித்தின் துணிவு ரிலீஸ் தேதி போஸ்டர்

போனி கபூருக்கே ஷாக் கொடுத்த ரசிகர்கள்… அஜித்தின் துணிவு ரிலீஸ் தேதி போஸ்டர்

அஜித் தற்போது துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க இயக்குனர் ஹெச் வினோத் படக்குழுவோடு தாய்லாந்துக்கு சென்றுள்ளார். அங்கு சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ள ஆக்‌ஷன் காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். விரைவில் துணிவு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னர் பொங்கல் பண்டிகைக்கு வாரிசு படத்தோடு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணிவு படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையாததால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது ரசிகர்களே பொங்கலுக்கு துணிவு படம் ரிலீஸாகும் என்று அறிவித்து போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இது சமூகவலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர் இப்போது வைரலாக பரவி வருகிறது.