Saturday, August 22, 2026
Home > Cinema > “என் மகளைக் காணவில்லை…” மீரா மிதுனின் தாய் போலீஸில் புகார்!

“என் மகளைக் காணவில்லை…” மீரா மிதுனின் தாய் போலீஸில் புகார்!

 நடிகை மீரா மிதுன் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இப்போது அவரைக் காணவில்லை என அவரின் தாயார் ஷ்யாமளா புகாரளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் ஆகியவர்களைக் குறித்து மிகவும் ஆபாசமாக விமர்சித்து ரசிகர்களுக்கு கோபத்துக்கு ஆளானார்.

அதையடுத்து தமிழ் சினிமா துறையில் இருக்கும் பட்டியலின கலைஞர்களை தவறாக பேசியதை அடுத்து அவர் மேல் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அவர் விசாரணைக்கு ஒழுங்காக ஆஜர் ஆகாததால் அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தற்போது அவரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மீரா மிதுனின் தாயார் ஷ்யாமளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன் மகளைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார். செல்போன் மூலமும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறுக் கேட்டுள்ளார். இந்த புகார் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,