மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் பிரபலம் ஆனவர் மாளவிகா மோகனன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

இவர் 2013 ஆம் ஆண்டு முதல் மலையாளம், கன்னடம் , ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து பட்டம் போலெ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் அவரை பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனன் சமூகவலைதளங்கள் மூலமாக மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்து வருக்கிறார். டிவிட்டரில் அடிக்கடி ரசிகர்களோடு உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதே ஒருபுறம் இருக்க இவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
