Monday, April 29, 2024
Home > Cinema > விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறப் போகும் ரிமிக்ஸ் … எந்த பாடல் தெரியுமா?

விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறப் போகும் ரிமிக்ஸ் … எந்த பாடல் தெரியுமா?

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

`

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன. இன்னும் சில ஆக்‌ஷன் காட்சிகளும் பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. அதற்கான இறுதிக் கட்ட ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் பற்றிய முக்கியமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸை பயன்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆல்தோட்ட பூபதி பாடல் வெளியான போது மிகப்பெரிய சார்ட்பஸ்ட்டர் ஹிட்டானது. குறிப்பாக விஜய் மற்றும் சிம்ரனின் நடனம் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாதது.

```
```