சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது.
மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் வேடத்தில் நயன்தாராவும், பிருத்விராஜ் வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு வந்த சிரஞ்சீவி இன்னும் ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லை. அதற்காக இந்த ரீமேக்கைக் கையில் எடுத்தனர். முன்னணி நாயகியான நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர்.

இந்நிலையில் தெலுங்கு பிராந்தியத்தைத் தவிர வேறு எங்கும் இந்த படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது ரிலீஸாகி 3 நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நயன்தாராவின் திருமணத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியான படமான காட்ஃபாதர் நல்ல வசூலைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
