பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சா பார்த்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது. இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர். இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியது. 12 நாட்களில் 400 கோடி இதுவரை 450 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்சே தன்னுடைய குடும்பத்தோடு இந்த படத்தைப் பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனத் தெரிகிறது.
