Sunday, April 19, 2026
Home > Cinema > இனிமே சம்பளம் இல்ல… லாபத்துல பங்குதானாம் – லவ் டுடே ப்ரதீப் முடிவு!

இனிமே சம்பளம் இல்ல… லாபத்துல பங்குதானாம் – லவ் டுடே ப்ரதீப் முடிவு!

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தொடங்கப்படாததால் இப்போது அவரே கதாநாயகனாக நடித்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. வெளியாகி 10 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியவை. முதல் முறையாக புதுமுகங்கள் நடித்த படம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் அடுத்து தான் இயக்கி நடித்துள்ள படத்துக்கு சம்பளம் வாங்காமல், லாபத்தில் இருந்து ஷேராக பெற்றுக்கொள்ள உள்ளாராம்.