இயக்குனர் இமையம் பாரதிராஜா இவர் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து வந்த இயக்குனர்களில் முக்கியமானவர். அதுவரை ஸ்டுடியோ செட் என இருந்த தமிழ் சினிமாவை தமிழக கிராமங்களை நோக்கி திருப்பியவர்.
அதுவரை செட்டில் உருவான படங்களை . உண்மையான கிராமங்களில் எடுக்க துவங்கினார் பாரதிராஜா . 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா முதல் முதலில் இயக்கிய 16 வயதினிலே படம் மிக பெரிய வெற்றிபெற்றது.

அது வரை தமிழ் சினிமா காட்டாத கிராமங்களை இயல்பாக காட்டியதும் அதற்கு ஒரு காரணம் என்றே சொல்லாம்.
இதுவரை 45 படங்களை இயக்கியுள்ளார் பாரதிராஜா அதில் பெரும்பாலான படங்கள் ஹிட். 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு பின் பாரதிராஜா 2 ஆவதாக இயக்கிய திரைப்படம் கிழக்கே போகும் ரயில்.

அந்த படத்தின் இறுதி காட்சிகளில் ராதிகா நிர்வாணமாக ஊரை சுற்றி வருவது போன்ற காட்சி படமாக்க வேண்டும். இந்த காட்சிக்காக தோல் நிறத்தில் இருக்கும் பிரத்யேக ஆடையை கொண்டு வந்தனர் படக்குழுவினர். ஆனால் அதை அணிந்துக்கொண்டு நடிக்க முடியாது என கூறிவிட்டார் ராதிகா.
எனவே இதற்காக டூப் போட வேறொரு பெண்ணை அழைத்து அந்த காட்சியை எடுக்க இருந்தனர். ஆனால் கதாநாயகி நிர்வாணமாக நடிக்கும் காட்சி உள்ளது என்பதை அறிந்துக்கொண்ட கிராம மக்கள் அதை பார்க்க நின்று கொண்டிருந்தனர். உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் முடிந்தவரை மக்களை அப்புறப்படுத்தினார்.

ஆனால் அங்கு இருக்கும் காம்பவுண்டிற்கு பின்னால் சிலர் ஒளிந்துக்கொண்டு படப்பிடிப்பை பார்த்துள்ளனர். அதை கவனித்த பாரதிராஜா பாக்கியராஜிடம் கூறி பிறகு அவர்களையும் விரட்டியுள்ளனர். இந்த நிகழ்வை பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
