Saturday, May 11, 2024
Home > Cinema > கைதி படத்தில் குட்டி பொண்ணாக வந்து ரசிக்க வைத்தவரா இது?…. அட தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி போல!

கைதி படத்தில் குட்டி பொண்ணாக வந்து ரசிக்க வைத்தவரா இது?…. அட தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி போல!

2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இதை தொடர்ந்து “கைதி 2” படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது

இதற்கிடையே கைதி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி வேடத்தில் நடிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார் அஜய் தேவ்கான். கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். தமிழில் இடம்பெறாத ஒரு கதாபாத்திரம் இந்தி படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

`

ஆனால் இந்தியில் கைதி ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ் படத்தோடு ஒப்பிட்டு கழுவி ஊற்றினார்கள்.

```
```

தமிழ் கைதி திரைப்படத்தில் டில்லியின் மகள் கதாபாத்திரத்தில் அமுதா என்ற பெண்ணாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பேபி மோனிகா. அதன் பிறகு அவர் சில படங்களில் நடித்தாலும் காணாமல் போனார். இந்நிலையில் இப்போது அவர் வளரிளம் பருவ பெண்ணாக மாறி வெளியிட்டுள்ள அவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவரின் புகைப்படத்தைப் பார்த்த பலரும் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி ஆயிட்டாங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.