அகாடமி அவாட்ஸ் எனப்படும் ஆஸ்கர் விருது 12 மார்ச் அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா . ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விழா 12 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கியுள்ளது. இது 95 ஆவது ஆஸ்கர் விழா என்பது குறிப்பிட தக்கது.
Elephant Whisperers Tamil documentary won the Oscar:
இந்த முறை 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதை 2 இந்திய படங்கள் பெற்றுள்ளனர். அதில் யானையை பராமரிக்கும் முதுமலை தம்பதிகள் பற்றிய ” தி எலிபண்ட் விஷ்பரர்ஸ்” என்ற தமிழ் குறும்படம். பெஸ்ட் டாக்குமெண்டரி கான ஆஸ்கார் விருதை பெற்றுள்ளது.

இரண்டாவதாக RRR திரைபடத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றுள்ளது. முதல் முறையாக தென் இந்தியாவை சேர்ந்த இரண்டு படங்கள் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
Nattu Nattu Song from RRR movie won Oscar:

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ” பீரியட் – எண்ட் ஆப் சென்டன்ஸ்” என்ற ஹிந்தி குறும்படம் பெஸ்ட் டாக்குமெண்டரி கான ஆஸ்கார் விருதை வென்றது.
அதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு நாம் அனைவரும் அறிந்த “ஸ்லம்டாக் மில்லினர்” திரைப்படம் 4 ஆஸ்கர் விருதை வென்றது அதில் நம் இசைப்புயல் ஏஅர் ரகுமான் 2 ஆஸ்கார் விருதை பெற்றார்.

அதற்கு முன்னர் ஒரு இந்திய திரைப்படம் ஆஸ்கார் விருது பெற்றது 1983 ஆம் ஆண்டு தான். 1982 ஆம் ஆண்டு வெளியான காந்தி திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்புகாக ஒரு ஆஸ்கார் விருதை வென்றது .
இதுவரை இந்திய திரைப்படங்கள் 8 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளனர். அதில் இந்த ஆண்டு 2 விருதுகளை பெற்றிருப்பது பல இந்திய சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Oscar 2023 India : Indian documentary film Elephant Whisperers won the Oscar in the Best Documentary Short Film category. Producer Guneet Monga along with director Kartiki Gonsalves took centre stage to accept the honour.
India also held its own at the 95th Academy Awards as RRR’s chartbuster Naatu Naatu won the Best Original Song