Thursday, April 18, 2024
Home > Cinema > பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆன அனு இம்மானுவேல்?

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆன அனு இம்மானுவேல்?

கார்த்தி நடிப்பில் அடுத்து ராஜு முருகன் இயக்கும் திரைப்படம் உருவாக உள்ளது.

கார்த்தி பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்களுக்கு அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

`

ராஷ்மிகா இப்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, இப்போது மீண்டும் கார்த்தியோடு இணைய உள்ளார். கார்த்தி இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

```
```

இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியும் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களின் கதாநாயகி அனு இம்மானுவேல் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. அனு இம்மானுவேலுக்கு இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வந்தார்.